‘சில்லிடும் இனிமை தூறலாய்!’புத்தக வடிவில்!

ஹாய் ஹாய் அன்பு வாசகர்களே!

என்னடா திடீர் என்ரி என்று பார்க்கிறீர்களா? 

எல்லாம் மிகவும் சந்தோசமான விஷயம் தான். அதை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வதாம்.

‘சில்லிடும் இனிமை தூறலாய்!’ நான் எழுதியவற்றுள்  எனக்கு மிகமிகப் பிடித்த கதை.

வாசகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும் என்பதை  மிக நன்றாகவே அறிவேன் . ஆன்லைனில் வாசித்தாலும் புத்தகத்திலும் வாசிக்க வேண்டும் எப்போ வரும் என்று பலர் என்னிடம் கேட்டிருகிறார்கள் . 

துளசி, நந்தன், பானு, சஞ்ஜீவ் மற்றும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவருமே மனதோடு மிகவும் நெருக்கமாக வந்து போவார்கள் . அத்தனை சுலபத்தில் நினைவுகளில் இருந்து அழிக்க முடியாத பாத்திரங்கள்.

இக்கதை, ஏப்ரல் முதல் கிழமையில் இருந்து புத்த வடிவில் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மிகமிக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசித்தவர்கள், இதுவரை வாசிக்காதவர்கள் என்கின்ற பாகுபாடு இன்றி புத்தகத்தை வாங்கி வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

புத்தகத்தை அழகுற அச்சிட்டு வெளியிட்ட அருண் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

குறுநாவல்கள்/ நாவல்கள் .

அன்பு வாசகர்களே!

பலரது வேண்டுகோளிற்கிணங்க  எனது முடிவுற்ற கதைகளில் சிலவற்றை  மீண்டும் உங்கள் வாசிப்புக்காகத்  தருகிறேன். 

மிகுதி நாவல்களை இன்னுமொரு சந்தர்ப்பத்தில்  தருகிறேன் .

நீயில்லாது வாழ்வேதடி !

மயிலிறகாய்!

நெஞ்சோடுதான் பூ பூத்ததே!

அன்பெனும் பூங்காற்றில்!

என்றும் உன் நிழலாக!

உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே!

நீ என் சொந்தமடி!

உயிரில் கலந்த உறவிதுவோ!

 

 மேலேயுள்ள கதைகளின் தலைப்புகளின் மீது கிளிக் செய்து வாசியுங்கள் . உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மிகுந்த மகிழ்வடைவேன். 

 

 

காவ்யா – 26, 27 , 28, 29( இறுதிப் பகுதிகள்)

 

அன்பு வாசகர்களே!

   ‘காவ்யா’ கதை ஆரம்பித்த இந்த இரண்டரை மாதங்களும் என்னுடன் பயணித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் அன்புகளும்!

   ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான உங்கள் கருத்துப் பகிர்வு பெரும்பாலும் அந்த அத்தியாயத்தை வாசிக்கையில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களாகவே இருந்தன. அவற்றை வாசிக்கையில் அதை உணர்ந்து மிக மிக மகிழ்வடைந்தேன்.

  எத்தனையோ கமெண்ட்ஸ் திரும்பத் திரும்ப வாசித்து நன்றாகவே சிரித்தேன்.

     கொஞ்சம் வேறு பட்ட நாயகனை அறிமுகம் செய்விக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தானாக வரவில்லை. வாசகர்களின் கருத்தே அதை உருவாக்கியது. ஆனாலும் பெரிதாக எந்த ஐடியாவும் இருக்கவில்லை. அப்படியிருக்கையில் சந்தோஷ் எப்படி உருவானான்.

   கார்த்திம்மா …உங்களுக்கு மறக்காது பதில் இதோ…

   ‘மாமா மகளை காதலித்து அவள் ஏதோ ஒரு காரணத்தால் மறுத்துச் செல்ல, அவள் வீட்டிலிருந்து கம்பஸ் வரும் நாயகி அவனின் மொத்தக் கோபத்துக்கும் ஆளாகுவாள்; காரணம் தெரியாது திண்டாடுவாள்.

  இப்படியிருக்கையில்,  ஒருமுறை மாமா மகளைத் தேடி அவன் அவள் வீட்டுக்கு வரும் போதுதான் அவன் காதல் தோல்வியில் தான் அகப்பட்டு நொந்து போனதை அறிவாள் நாயகி.

   யாரிலோ உள்ள கோபத்தை என்னில் காட்டினான் என்கின்ற கோபம் அவளுள்.

  ஏமாற்றியவள் வீட்டுப் பெண் என்கின்ற கோபம் இவனுள்.

  அப்படியே தொடர்பின்றி போய் விடும்.

   சிலவருடங்களின் பின், வேலை செய்யுமிடத்தில் சந்தித்துக் கொள்வார்கள். பிறகு என்ன? மோதல் ..அப்படியே காதல்..’

   இப்படிச் சொல்லி, “இதைக் கதையாக எழுத முடிந்தால் முயன்று பாருங்க அக்கா..உங்கள் வழமையான நாயகர்களில் இருந்து மாறுபட்டவன் கிடைப்பான்.” என்று சொன்னது வேறு யாரும் இல்ல..தர்சி கோகு.

    எனது கதைகளின் முதல் வாசகி, மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிட்டு, “இது என் கருத்துக்கா, நான் சொல்வதை சரியாக விளங்கிக் கொள்வீங்க என்று நினைக்கிறன்.” என்று சொல்லும் கண்டிப்பான கருத்துப் பகிர்வுக்கு சொந்தக்காரி. அதுமட்டும் இல்லாது “எழுத்துப் பிழைகளோடு கதை வாசிக்கையில் கோபம் தான்கா வருது.” என்று சொல்லி, அத்தனையையும் பொறுமையா திருத்தியும் தந்து விடுவார் .

   இக்கதைக்கு பிள்ளையார் சுழி போட்ட தர்சிக்கு நம் எல்லோர் சார்பிலும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   கமெண்ட்ஸ் சொன்னவர்கள், இனிச் சொல்லப் போகிறவர்கள், வாசித்துவிட்டு அமைதியாகப் போக இருக்கிறவர்கள், பெண்மை,லேடீஸ்விங்க்ஸ் தளங்கள் என எல்லோருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளும் அன்பும்!

     கதையின் இறுதி நான்கு பதிவுகளும் இதோ…எப்போதுமே சொல்வதுதான் உங்கள் கருத்துக்களை அறியும் ஆவலோடு காத்திருப்பேன்.   

     மீண்டும் சந்திப்போம்..எப்போ என்று எனக்கே தெரியாத போது என்ன சொல்வது..            

 

   CALAMEO –   26

                              27

                              28

                              29

 

GOOGLE DOC – 26

                              27

                              28

                              29

COMMENTS : PENMAI

                          LADYSWINGS    

காவ்யா 25

அன்பு வாசகர்களே !

இதோ அடுத்த பதிவு .

இதுவரை கமெண்ட்ஸ் சொல்லாதவர்களிடமிருந்து கருத்துக்களைஎதிர்பார்க்கிறேன் .

ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அழகாக, வெகுவாக ரசிக்கும் படி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வாசக நட்புகள் ஒவ்வொருவருக்கும் மிக்க மிக்க நன்றி.

நீங்கள் கதையை ரசிப்பது போலவே நான் உங்கள் கமெண்ட்ஸ் ஒவ்வொன்றையும் வெகுவாக ரசித்து வாசிக்கிறேன்.

இன்னும் நான்கு எபிதான்..வாசிக்கத் தொடங்காதவர்கள் ஆரம்பிக்கலாம் .

CALAMEO 25 

GOOGLE DOC 25 

COMMENTS :PENMAI              

                         LADYSWINGS

 

காவ்யா 24

அன்பு வாசகர்களே !

இதோ வாசகர்களின் விருப்பத்துக்கிணங்க அடுத்த அத்தியாயம் போட்டிருக்கிறேன் .

இப்படி மனம் அறிந்து நான் நடந்துகொள்ளும் பொழுது நீங்க பார்த்துப் பாராமல் போனால் ……….எதுவுமே நல்லா இருக்காது சொல்லீட்டன்.

இன்னும் ஐந்து அத்தியாயங்களில் கதை முடிந்துவிடும் .அதனால் முழுவதும் முடிய வாசிப்போம் என்று இருப்பவர்கள் வாசிக்க ஆரம்பியுங்கள்.

CALAMEO 24

GOOGLE DOC 24 

 

COMMENTS : PENMAI

                          LADYSWINGS